செல்லம்மா, மகளே என் மருமகளே தொடர்களில் நடித்துவரும் நடிகை ஸ்ரியாவுக்கு இன்று (டிச., 14) திருமணம் நடைபெற்றது.
கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமண நிச்சயம் நடைபெற்ற நிலையில், ஓராண்டு கழித்து இன்று திருமணம் நடைபெற்றது.
சொகுசு விடுதியில் பிரமாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில், திரைப் பிரபலங்கள் உள்பட நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றிருந்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள படங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் 2022 மே முதல் 2024 செப்டம்பர் வரை செல்லம்மா தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் பிக் பாஸ் பிரபலம் அன்ஷிதா நாயகியாக நடித்திருந்தார். இத்தொடரில் நடிகை ஸ்ரியாவும் முக்கிய பாத்திரத்தில் தோன்றினார்.

ஸ்ரியா - படம் - இன்ஸ்டாகிராம்
இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் மகளே என் மருமகளே தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

சின்ன திரையில் முக்கிய குணச்சித்திர நடிகைகளுள் ஒருவராக இருக்கும் ஸ்ரியா, இதற்கு முன்பு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சாக்லேட் (2019), எ குயின் ஆன் ஸ்டேக் (2016), ஐராவதிகாரம் (2019) ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.
திருமண நிகழ்வில்... - படம் - இன்ஸ்டாகிராம்
கடந்த ஜனவரியில் ரோஷித் நரசிம்மன் என்பவருடன் ஸ்ரியாவுக்கு இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன்பிறகு கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9: திடீர் ட்விஸ்ட்! இந்த வாரம் இருவர் வெளியேற்றம்!
Summary
Chellamma MagaleEnMarumagale Serials fame Actress Sriya got married Today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று முதல்வா் ரங்கசாமி பிறந்த நாள் விழா

விரைவில் திருமணம்! மகள்கள் குறித்து மனம் திறந்த நடிகை மதுபாலா!

இதற்காக என் அம்மா என்னை ப்ளாக் செய்தார்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

சிறகுகள் தொடரில் இணைந்த தாய் மாமன் சீரியல் நடிகை!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



