நடிகர் ரஜினியின் படையப்பா திரைப்படம் மறுவெளியீட்டிலும் வசூலில் கலக்கி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிக திரைகளில் மறுவெளியீடானது.
ரஜினியின் 75-வது பிறந்த நாளில் மறுவெளியீடானதால் சென்னையிலுள்ள சில திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து இப்படத்தைக் கொண்டாடினர்.
முக்கியமாக, ரஜினி அறிமுகமாகும் காட்சியை விசிலடித்து உற்சாகம் பொங்க ரசிகர்கள் கண்டுகளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல திரைகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இருப்பதால் மறுவெளியீட்டிலும் நல்ல வசூலைக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வெளியான இரண்டு நாள்களிலேயே ரூ. 6 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிபெற்ற பழைய திரைப்படங்களை மறுவெளியீடு செய்யும் போக்கு அதிகரித்தாலும் சில திரைப்படங்களே மீண்டும் வெற்றி பெறுகின்றன.
அந்த வகையில், நடிகர் விஜய்யின் கில்லி திரைப்படம் மறுவெளியீட்டில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது. தற்போது, படையப்பாவுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தால் கில்லியின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.