துரந்தர் பட வில்லனுக்கு வரவேற்பு: இந்தியாவில் மட்டுமே ரூ.306 கோடி வசூல்!

நாயகனை விட துரந்தர் பட வில்லனுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது குறித்து...
Akshaye Khanna in the film Durandhar.
துரந்தர் படத்தில் அக்‌ஷய் கண்ணா. படங்கள்: ஜியோ ஸ்டீடியோஸ்.
Updated on
1 min read

துரந்தர் படத்தின் நாயகன் ரவ்வீர் சிங்கை விட அந்தப் படத்தின் வில்லன் அக்‌ஷய் கண்ணாவுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆதித்யா தார் இயக்கத்தில் கடந்த வாரம் துரந்தர் படம் உலகம் முழுக்க வெளியானது.

பாகிஸ்தான் நாட்டிற்குச் செல்லும் ஒற்றனாக ரன்வீர் சிங் சிறப்பாக நடித்துள்ளார்.

இருந்தும் தனது கிளாஸான நடிப்பினால் அவரை விட அதிக வரவேற்பைப் பெற்றுள்ளார் நடிகர் அக்‌ஷய் கண்ணா.

இந்தப் படத்தில் ரஹ்மான் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்‌ஷய் கண்ணாவுக்கு சமூக வலைதளத்தில் அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

குறிப்பாக அவரது தீம் மியூசிக், நடனம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படம் இந்து - முஸ்லிம் பிரச்னை தூண்டுவதாக சிலர் விமர்சித்தாலும் இந்தியாவில் மட்டுமே ரூ.306.40 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In the film 'Durandhar', the villain Akshaye Khanna is receiving far more appreciation than the hero, Ravveer Singh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com