செல்வராகவனின் புகைப்படங்களை நீக்கிய மனைவி கீதாஞ்சலி!

இயக்குநர் செல்வராகவனுடான புகைப்படங்களை நீக்கிய கீதாஞ்சலி...
இயக்குநர் செல்வராகவன், கீதாஞ்சலி
இயக்குநர் செல்வராகவன், கீதாஞ்சலி
Updated on
1 min read

இயக்குநர் செல்வராகவனின் புகைப்படங்களை அவரது மனைவி இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியிருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2000-களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்தவர் செல்வராகவன். இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய சிறந்த திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நின்றும் பிரபலமாகவே இருக்கிறார். தற்போது, ஜிவி பிரகாஷை நாயகனாக வைத்து மெண்டல் மனதில் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இவருக்கும் நடிகை காஜல் அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர்.

தொடர்ந்து, செல்வராகவன் அவரது உதவி இயக்குநர் கீதாஞ்சலியைத் திருமணம் செய்துகொண்டார். இந்த இணைக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கீதாஞ்சலி மாலை நேரத்து மயக்கம் என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், தன் கணவர் செல்வராகவனுடனான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து கீதாஞ்சலி நீக்கியுள்ளார். இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், நேர்காணல் ஒன்றில் பேசிய செல்வராகவன், ‘அடுத்த 6 மாதத்தில் நான் சந்திக்கப்போகும் பெரிய பிரச்னை வரப்போகிறது’ எனக் கூறியிருந்தார். அதனையும் இதையையும் தொடர்புபடுத்தி செல்வராகவனுக்கு விவாகரத்தா? என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். அதேநேரம், செல்வராகவன் தன் மனைவியுடான புகைப்படங்களை எதையும் நீக்கவில்லை.

Summary

geetanjali selvaraghavan deletes pictures with selvaraghavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com