ரெஜினா கேசண்ட்ரா நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ரெஜினா கேசண்ட்ரா தமிழில் 20 ஆண்டுகளாக நடித்து வருகிறார். கதாநாயகியாக நடித்து கவனம் பெற்றவர், விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடித்தார்.
ஆனால், விடாமுயற்சி கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக தோல்விப்படமானது.
இந்த நிலையில், நடிகர் அஜித் நடிக்கவுள்ள அவரது 64-வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரெஜினா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: அசோக் செல்வனின் புதிய பட படப்பிடிப்பு நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.