

நடிகர் அஜித் - ஷாலினி இணையின் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகிறது.
நடிகர் அஜித் குமார் மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் நேற்று தன் குழுவினருடன் கலந்துகொண்டார். இப்பந்தயத்தைக் காண மலேசியா, சிங்கப்பூரிலுள்ள பல தமிழ் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் சிலர் வந்தனர்.
பந்தயத்தில் நடிகர் அஜித்துக்கு உறுதுணையாக இருக்க அவரது குடும்பமும் வந்திருந்தது.
இந்த நிலையில், அங்கு நடிகர் அஜித் குமார் தன் மனைவி ஷாலினிக்கு முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தினார். மேலும், தன் மகன் ஆத்விக்கையும் கட்டியணைத்தது ரசிகர்களிடம் எமோஷனலை ஏற்படுத்தியது.
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட அஜித் - ஷாலினி இணையின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.