

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், தொடர் விரைவில் முடிவடையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஆனந்த ராகம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நடிகை அனுஷா ஹெக்டே நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நடிகர் அழகப்பனும் நடிக்கின்றனர்.
பிரீத்தி சஞ்சீவ், ஸ்வேதா செந்தில்குமார், இந்து செளத்ரி, ரஞ்சன் குமார், வைஷாலி தணிகா, அஞ்சலி, வரதராஜன், ஜெயக்குமார், சிவரஞ்சினி விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ஆனந்த ராகம் தொடரின் ஈர்ப்பு மிகுந்த கதை மற்றும் பிற்பகல் நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் முதன்மை டிஆர்பி பெறும் தொடர்களில் ஒன்றாக உள்ளதால் ஆனந்த ராகம் தொடர்ந்து வரவேற்பு பெற்று வருகிறது.
படித்த புத்திசாலித்தனம் மற்றும் தைரியம் நிறைந்த ஏழைப் பெண், படிக்காத பணக்கார இளைஞனை திருமணம் செய்துகொண்டு வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளும், பணக்கார குடும்பத்திற்கு வரும் சிக்கல்களை தீர்ப்பதிலும் பெண்ணாக இருந்து முக்கியத்துவம் பெறும் பாத்திரத்தை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நாயகியின் செயல்களால் நாயகன் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படுகின்றன. கதையில் நாயகிக்கு அடிக்கடி சண்டைக் காட்சிகளும் இடபெறுகின்றன. இது பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது இரட்டை வேடங்களிலும் அனுஷா நடித்து வருகிறார். தன்னுடைய நடிப்புத் திறனை முழுமையாக வெளிக்கொண்டுவரும் வகையில் அமைந்துள்ள இரட்டை பாத்திரங்களால், ரசிகர்கள் மத்தியில் அனுஷாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதால், தொடர் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக் காட்சி படப்பிடிப்பின்போது இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9: அம்மா, ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய நடிகை வியானா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.