

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் வெளியேற்றப்பட்ட நடிகை வியானா, தனது தாயிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக உழைத்த வியானா, தற்போது பாதியிலேயே வெளியேறியதால் மனம் வருந்தி மன்னிப்பு கோரியுள்ளார்.
மேலும், இத்தனை வாரங்கள் போட்டியில் நீடிக்கச் செய்து ஆதரவளித்தவர்களுக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வது வாரத்தை எட்டியுள்ளது. 10வது வாரத்தின் இறுதியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன்படி முதலில் ரம்யா ஜோ வெளியேற்றப்பட்டார்.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகை வியானா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் வெளியேறியதுடன் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தனது பெயரில் புதிய கணக்கு தொடங்கியுள்ளார்.
அதில் முதல்முறையாக வியானா பதிவிட்டுள்ளதாவது, எனக்கு ஆதரவு அளித்த ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய பரிசு. உங்களை ஏமாற்றியதற்காக எனது தாயிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறியிருந்தாலும், மக்கள் மனங்களை வியானா முழுமையாக வென்றுள்ளதாக ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யாவுடன் வெளியேறினார் வியானா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.