

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து நடிகை வியானா வெளியேறினார். சனிக்கிழமை ரம்யா ஜோ வெளியேற்றப்பட்ட நிலையில், மறுநாள் வியானா வெளியேற்றப்பட்டுள்ளார்.
ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வாரம் இருவர் வெளியேற்றப்பட்டுள்ளதால், பிக் பாஸ் போட்டியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வது வாரத்தை எட்டியுள்ளது. 10வது வாரத்தின் இறுதியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன்படி முதலில் ரம்யா ஜோ வெளியேற்றப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி உரையாடினார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக வியானா வெளியேற்றப்பட்டார்.
ஆரம்பத்தில் சரியாக விளையாடாத நிலையில், மூன்று வாரங்களுக்குப் பிறகு வியானா தனது பாணியில் வலுவான போட்டியாளராக மாறினார். இடையில் இசைக்கலைஞர் எஃப்.ஜே., உடனான காதல் விவகாரத்தில் விமர்சிக்கப்பட்டார். எனினும், போட்டியாளர்களின் நண்பர்கள் அறிவுரையைத் தொடர்ந்து போட்டியில் கவனம் செலுத்தி வந்தார்.
கடந்த இரு வாரங்களாக விஜய் சேதுபதியின் பாராட்டுகளையும் பெற்று வந்தார். இந்நிலையில், குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக நடிகை வியானா வெளியேற்றப்பட்டார்.
போட்டியின் நடுவே, இந்த வாரம் தான் வெளியேற்றப்படலாம் என வியானா கணித்திருந்த நிலையில், அவர் கணித்தபடியே நடந்துள்ளது. எனினும் ரசிகர்கள் பலர் வியானா வெளியேற்றப்பட்டது ஏற்புடையதல்ல என பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.