நடிகர் ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம் வசூலில் அசத்தி வருகிறது.
இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், அக்ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத் நடிப்பில் உருவான திரைப்படம் துரந்தர்.
பாகிஸ்தானில் உளவுப்பணி பார்க்கும் இந்திய ராணுவ வீரரின் கதையாக உருவான இப்படம் பல உண்மைச் சம்பங்களையும் கதாபாத்திரங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, படம் முழுவதும் பாகிஸ்தானில் நடைபெறுவது போன்ற காட்சிகளும் 3.30 மணிநேரம் அளவுகொண்ட திரைப்படத்தில் பெரிய தொய்வாக அமையாதது படத்திற்கு பலமாக அமைந்திருந்தது. இருந்தும், வசூலில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.
ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக வில்லனாக நடித்த அக்ஷய் கன்னாவின் நடன ரீல்ஸ் இன்ஸ்டாகிராமில் வைரலானதால் இப்படத்திற்கான டிக்கெட்கள் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டன.

இதனால், இரண்டாம் வாரத்தில் இப்படத்தின் வசூலில் மிகப்பெரிய மாற்ற ஏற்பட்டதுடன் இதுவரை உலகளவில் ரூ. 552.70 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார முடிவிற்குள் ரூ. 750 கோடியை நெருங்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வா வாத்தியார் எப்போது ரிலீஸ்?
Summary
dhurandhar movie collected rs. 550 crores in worldwide
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியாவில் துரந்தர் - 2 ஓடிடி வெளியீடு எப்போது? எதில் பார்க்கலாம்?

துரந்தர் - 2 : அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ரூ. 70 கோடி வசூலித்த யூத்!

தெலுங்கு மறுவெளியீட்டில் அசத்தும் காஞ்சனா!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


