

நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்பட பாடல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் பராசக்தி. இப்படம் மொழித்திணிப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
மேலும், தமிழ் மொழியின் சிறப்புகளையும் அன்றைய அரசியலை மையப்படுத்தியும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பராசக்தியின் நமக்கான காலம் பாடல் நேற்று வெளியானது. இதில், தமிழ் வடிவத்தில், ‘தமிழ் வாழ்க’ என்றும் தெலுங்கு வடிவத்தில், ‘தெலுங்கு வாழ்க’ என்றும் எழுதப்பட்ட வாக்கியம் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு வெளியீட்டிற்காக இது குறிப்பிடப்பட்டிருந்தாலும், தமிழ் தீ பரவட்டும் என தமிழ் மொழிக்காக எடுக்கப்பட்ட திரைப்படத்தில் தெலுங்கு வாழ்க என்பது நெருடலை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.