

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனுமன் தொடர் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
புராணத்தில் வரும் அனுமன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் ஆன்மிகத் தொடர் அனுமன். இந்தத் தொடர் தொடங்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று டிஆர்பியில் முன்னிலை வகிக்கிறது.
முன்னதாக ஒளிபரப்பாகி வந்த இராமாயணம் தொடர் டிஆர்பியில் முன்னிலையில் இருந்தது. இந்தத் தொடர் நிறைவடைந்த நிலையில், மாற்றாக தொடங்கப்பட்ட அனுமன் தொடரும் டிஆர்பியில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறும்.
இதிகாச தொடர்கள் எப்போது வாரநாள்களில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்தத் தொடர்களைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ரேஷ்மா முரளிதரன், ஜிஷ்ணு மேனன் நடிக்கும் புதிய தொடரான செல்லமே செல்லம் தொடர் இன்று(டிச. 15) முதல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளது.
இதனால் அனுமன் தொடர் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி முதல் வார இறுதி நாளான ஞாயிறுதோறும் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் ஒளிபரப்பு செய்யப்பட்ட அனுமன் தொடரை, ஒரு நாள் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் சனிக்கிழமையும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிக்க: தெலுங்கு வாழ்க? குழப்பத்தை ஏற்படுத்தும் பராசக்தி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.