பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஆதரவு தெரிவிக்கத் தகுதியான நபர்கள் ஒருவரும் இல்லை என ரசிகர்கள் கருத்து...
பிக் பாஸ் போட்டியாளர்கள்
பிக் பாஸ் போட்டியாளர்கள்படம் - எக்ஸ்
Updated on
2 min read

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஆதரவு தெரிவிக்கத் தகுதியான நபர்கள் ஒருவரும் இல்லை என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் ஒளிபரப்பாகி 11 வாரங்களான நிலையில், எந்தவொரு போட்டியாளருமே போட்டியைப் புரிந்து மக்கள் மனங்களைக் கவர விளையாடவில்லை என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கான கேப்டனாக கானா வினோத் தேர்வாகியுள்ளார்.

இதுவரை 10 கேப்டன்கள் பொறுப்பேற்ற நிலையில் ஒருவருமே சிறந்த கேப்டன்களாக தேர்வாகவில்லை. வீட்டில் உள்ள பிரச்னைகளை சரி செய்யாமல் பலருமே விமர்சனத்திற்குள்ளாகினர். வார இறுதிகளில் விஜய் சேதுபதியும் கேப்டன்கள் செய்த தவறுகள் குறித்து கடுமையாக விவாதித்தார்.

கேப்டன்களுக்கு கட்டுப்பட்டு போட்டியாளர்களும் நடந்துகொள்வதில்லை என்றும், ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக்கொள்வதாகவும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

பிக் பாஸ் ஏதேனும் டாஸ்க் கொடுத்தால், அதனை நகைச்சுவையுடன் பொழுதுபோக்கு அம்சங்களுடன் விளையாடாமல், அதிலும் ஈகோவுடன் சண்டையிட்டு போட்டியையை கெடுப்பதாக விஜய் சேதுபதியும் குறிப்பிட்டு எடுத்துரைத்துள்ளார்.

தர்பூசணி ராஜ்ஜியம் டாஸ்க்கின்போது போட்டியாளர்கள், தாங்கள் ஏற்றுள்ள வேடத்தையும் பொருட்படுத்தாது, அதிலிருந்து வெளியேறி தனிப்பட்ட சண்டையிட்டுக்கொண்டனர். அப்போது பொறுமையிழந்து குறிக்கிட்ட பிக் பாஸ், போட்டியாளர்களை கடுமையாக விமர்சித்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத வகையில், போட்டியாளர்களுடன் சேர்ந்து பிக் பாஸும் டாஸ்க் ஆடினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 71 வது நாளான நேற்று கேப்டனை தேர்வு செய்வதற்கான போட்டி நடைபெற்றது. இதில் சுபிக்‌ஷா, விக்கல்ஸ் விக்ரம், ஆதிரை, கானா வினோத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்று கானா வினோத், 11 வது வாரத்துக்கான கேப்டனாக பொறுப்பேற்றார்.

11 வாரங்களில் பிக் பாஸ் கொடுத்த போட்டிகளில் எந்தவொரு விதிமீறலும் இல்லாம் ஆடியது இந்தவொரு போட்டிதான் என பிக் பாஸே குறிப்பிட்டார். அந்த அளவுக்கு மோசமான போட்டியாளர்களாகவே இந்த சீசன் முழுக்க நிரம்பியுள்ளனர்.

இதனால், 70 நாள்களாகியும் இவருக்கு ஆதரவு தெரிவிக்கலாம் எனக் கூறும் வகையில், தகுதியான ஒருவர் கூட இல்லை என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | நீலாம்பரியாக செருப்பைக் காட்டிய சான்ட்ரா! படையப்பாவாக பதிலடி கொடுத்த கானா வினோத்!

Summary

Bigg boss 9 tamil no contestant is worth to vote

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com