ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

ஜன நாயகன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறித்து...
Jana Nayagan poster, kvn productions
ஜன நாயகன் புதிய போஸ்டர்படம்: எக்ஸ் / கேவிஎன்
Updated on
1 min read

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் சுமார் 3 மணி நேரம் 6 நிமிஷங்கள் (186 நிமிஷங்கள்) இருக்குமெனக் கூறப்படுகிறது.

இதுதான் விஜய் படங்களிலேயே நண்பன் (188 நிமிஷங்கள்) படத்துக்குப் பிறகு நீளமான படமெனக் கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் டிச. 27 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வுக்கு 1 லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஜன நாயகன் திரைப்படத்தின் டிரைலரை புத்தாண்டு அன்று (ஜன. 1) வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்குச் சென்றதால் ’ஜன நாயகன்’ திரைப்படமே தனது கடைசி படமாக இருக்குமெனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Summary

Actor Vijay's last film, Jananayagan, is said to be approximately 3 hours and 6 minutes long.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com