

மார்க் புரமோஷன் நிகழ்வில் நடிகைகள் குறித்த கேள்விக்கு நடிகர் சுதீப் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மேக்ஸ். இப்படத்தின் இயக்குநர் விஜய் கார்த்திகேயன் தற்போது மார்க் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இதிலும் நாயகனாக சுதிப்பே நடித்திருக்கிறார். அதிரடியான ஆக்சன் திரைப்படமாக உருவான இது கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்வு நேற்று (டிச.15) சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு பட அனுபவங்கள் குறித்து கிச்சா சுதீப் பேசினார்.
பின், கேள்வி பதில் நேரத்தில் நாயகியொருவரிடம், “இந்த நிகழ்வில் நடிகைகள் ஓரமாக உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதுபோலத்தான் படத்தில் உங்களுக்கான இடமும் இருக்குமா?” எனக் கேள்வி கேட்கப்பட்டது
இதனைக் கேட்ட சுதீப், “இந்த மாதிரி ஒரு கேள்விகூட எங்கள் படப்பிடிப்பில் வரவில்லை. அதனால்தான் படம் நன்றாக வந்தது. இது நோக்கத்துடன் நிகழவில்லை. ஒரு கொண்டாடத்திற்கு வரும்போது கொண்டாடத்தான் வேண்டும். அதைவிட்டு, இப்படி கேள்வி கேட்பது சங்கடத்தைக் கொடுக்கிறது. அன்பில் அன்பு மட்டுமே இருக்க வேண்டும்.” என்றார்.
மேலும், அந்த நடிகைகளை முன்னிருக்கையில் அமர வைத்த சுதீப், “நீங்கள் படப்பிடிப்பில் எவ்வளவு மரியாதையாக நடத்தப்பட்டீர்கள்?” என்பதைச் சொல்லுங்கள் இது என் கேள்வி என்றதும் பலரும் கைதட்டி அவரைப் பாராட்டினர்.
அதேநேரம், சில மாதங்களுக்கு நடிகை கௌரி கிஷனிடம் தேவையற்ற கேள்வியைக் கேட்டு அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதுபோல் சுதீப்பிடமும் கேட்டது பலருக்கும் எரிச்சலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: தமிழில் இருக்கும் ஒற்றுமை தெலுங்கில் இல்லை: தமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.