ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

பராசக்தி உடன் வெளியாகவுள்ள ஜனநாயகன் திரைப்படம் பற்றி ஸ்ரீலீலா பேசியது குறித்து...
ஜனநாயகன் விஜய், ஸ்ரீலீலா
ஜனநாயகன் விஜய், ஸ்ரீலீலாபடம் - இன்ஸ்டாகிராம்
Updated on
1 min read

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக நடிகை ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ஸ்ரீலீலா தனது படங்கள் குறித்தும், தமிழில் நாயகியாக அறிமுகமாகவுள்ளது குறித்தும் பேசினார்.

செய்தியாளர்களுடன் நடிகை ஸ்ரீலீலா பேசியதாவது, பராசக்தி திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகிறது. தமிழில் இது என்னுடைய முதல் படம் என்பதால், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

விஜய் நடித்து முடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் நான் நடித்த பகவந்த் கேசரி படத்தின் மறு உருவாக்கமா? என்று தெரியாது. ஆனால், நான் விஜய்யின் மிகத்தீவிர ரசிகை நான். விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

மேலும், தெலுங்கு, தமிழ் மொழியைத் தொடர்ந்து ஹிந்தி திரை உலகிற்குச் செல்வீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரீலீலா, இவை அனைத்துமே முறைப்படி நடக்க வேண்டும். முறையான தயாரிப்பு நிறுவனம் கிடைக்க வேண்டும். அது நடப்பதற்காக காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

இயக்குநர் எச்.வினோத் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள ஜனநாயகன் (ஜன. 9) திரைப்படமும் சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள பராசக்தி (ஜன. 14) திரைப்படமும் பொங்கலையொட்டி ஒன்றாக வெளியாவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

Summary

Parasakthi heroin sreeleela about vijays jananayagan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com