

நடிகை பாடினி குமார் நடித்துள்ள புதிய இணையத் தொடர் இன்று(டிச. 16) வெளியானது.
ஹார் பீட் இணையத் தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் பாடினி குமார், குரு லட்சுமணன்.
இவர்கள் ஹார்ட் பீட் தொடரில் இணைந்து நடித்ததன் மூலம், இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினர்கள்.
இந்த நிலையில் குரு லட்சுமணன் மற்றும் பாடினி குமார் ஆகியோர் இணைந்து புதிய இணையத் தொடரில் நடித்துள்ளனர். இந்தத் தொடருக்கு ஹார்டிலே பேட்டரி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஹார்ட்ல பேட்டரி இணையத் தொடரை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்குகிறார். இந்த இணையத் தொடர் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நாயகி பாடினி லவ் மீட்டர் என்ற கருவியை உருவாக்குகிறார். அந்தக் கருவியின் மூலம் ஒருவர், நம்மீது எவ்வளவு அன்பை வைத்துள்ளனர் என்பதைக் கண்டறிய முடியும். அந்தக் கருவியே பாடினிக்கு எதிராக எவ்வாறு திரும்புகிறது என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அழிஞ்சாட்டம்: மோகன்லால் - திலீப் படத்தின் முதல் பாடல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.