

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சி வரலாற்றில் முதல் முறையாக, போட்டியில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார் பிக் பாஸ்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 11 வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி, புதிய சீசனை தொகுத்து வழங்கி, போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
10 வது வாரத்தின் இறுதியில் ரம்யா ஜோ, வியானா என இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது 11 வாரத்திற்குள் போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர். இந்த வாரத்தின் கேப்டனாக கானா பாடகர் வினோத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த வாரம் போட்டியாளர்களுக்கு நேரத்தைக் கணிக்கும் போட்டி வைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் குறிப்பிட்ட நேரத்தை தெரிவிப்பார். போட்டியாளர்கள் கடிகாரம்போல நின்று நேரத்தை துல்லியாகக் கணித்து, பின்னர் மணி அடிக்க வேண்டும்.
இதணைத் தொடர்ந்து நடன மேடையில் நடனம் ஆட வேண்டும். 3 அணியாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் போட்டியை வெல்லும் அணிக்கு அடுத்த வாரம் நடைபெறும் கேப்டன் போட்டியில் பங்கேற்கலாம்.
அதனைத் தவிர்த்து மேலும் ஒரு சலுகையை பிக் பாஸ் அறிவித்துள்ளார்.
இந்த வாரம் போட்டியில் வென்ற அணியிலிருந்து, சிறப்பாக பங்கெடுத்த ஒருவருக்கு, அடுத்த வாரம் நடைபெறவுள்ள குடும்ப உறுப்பினர்கள் சுற்றுக்கு வரும் உறவினர்கள் 24 மணி நேரம் பிக் பாஸ் வீட்டில் தங்கலாம் என்ற புதிய சலுகையை பிக் பாஸ் அறிவித்துள்ளார்.
வழக்கமாக, பிக் பாஸ் வீட்டுக்கு வரும் உறவினர்கள் 30 நிமிடங்கள் வரை இருப்பார்கள், ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் முதல்முறையாக, 24 மணி நேரம் இருக்கும் இந்த அறிவிப்பை பிக் பாஸ் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பைக் கேட்டு அதிர்ச்சியும் உற்சாகமுகம் அடைந்த போட்டியாளர்கள், இந்த வார போட்டியை வெல்ல தீவிரமாக ஆர்வம்காட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.