ரூ. 100 கோடி வசூல் இயக்குநருடன் இணையும் ஷண்முக பாண்டியன்?

ஷண்முக பாண்டியனின் புதிய படம் குறித்து...
ஷண்முக பாண்டியன்
ஷண்முக பாண்டியன்
Updated on
1 min read

நடிகர் ஷண்முக பாண்டியனின் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகனான ஷண்முக பாண்டியன் நடிகராக உள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான படை தலைவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அடுத்ததாக, இவர் நடித்து முடித்த கொம்புசீவி திரைப்படம் வருகிற டிச. 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், நடிகர் ஷண்முக பாண்டியன் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை இயக்கி பாராட்டுகளைப் பெற்ற மித்ரன் தற்போது, மற்றொரு திரைப்பட பணியில் உள்ளார். இது நிறைவு பெற்றதும் ஷண்முக பாண்டியனுடனான படத்தைத் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

director mithran r jawahar may direct a film with shanmuga pandian

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com