

டெர்மினேட்டர் திரைப்படங்களின் வரிசையில் உருவாகும் புதிய பாகத்தில், நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் நடிக்கவில்லை என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் உருவான டெர்மினேட்டர் திரைப்படங்களுக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். இப்படங்களில், பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் நாயகனாக நடித்திருந்தார்.
அறிவியல் (சயின்ஸ் ஃபிக்ஷன்) சார்ந்த ஆக்ஷன் கதைகளத்துடன் உருவாகி கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான டெர்மினேட்டர் முதல் பாகத்தில் இருந்து நடிகர் அர்னால்ட், டி-800 எனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த நிலையில், புதியதாக உருவாகும் டெர்மினேட்டர் திரைப்படத்தில் நடிகர் அர்னால்ட் நடிக்கவில்லை எனவும், புதிய தலைமுறைக் கதாபாத்திரங்கள் இடம்பெறுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் இந்தப் புதிய அப்டேட், அதிர்ச்சியளிப்பதாக டெர்மினேட்டர் திரைப்படங்களின் ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.