

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி சில ரசிகர்கள் நடிகையிடம் அத்துமீறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ராஜாசாப் திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பாடல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (டிச. 17) ஹைதராபாத்திலுள்ள வணிக வளாகத்தில் நடைபெற்றது.
இதில், படத்தின் நாயகிகளில் ஒருவரான நடிகை நிதி அகர்வால் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
மேலும், நிகழ்வு முடிந்ததும் வளாகத்திலிருந்து தன் காருக்கு செல்ல நிதி அகர்வால் முயன்றபோது அவரை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். இதனால், கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட, சில ரசிகர்கள் நிதி அகர்வாலை மறைமுறைமாக தொடவும், தொட முயற்சிக்கவும் செய்தனர். மேலும், அவரது துப்பட்டாவும் இழுக்கப்பட்டது.
சில நொடி பரபரப்புகளுக்குப் பின் நிதி அகர்வால் பாதுகாப்பாக காருக்குள் அனுப்பப்பட்டார். காரில் ஏறியதும் ரசிகர்களின் செயலால் அதிருப்தியடைந்த நிதி அகர்வால், கடுமையான வார்த்தைகளால் திட்டிய விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ஒரு நடிகையை இப்படிச் சூழ்ந்துகொண்டு நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்ட ரசிகர்களின் செயலைப் பலரும் கண்டித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: தொடரும் ஏஐ ஆபாச அத்துமீறல்கள்! நடவடிக்கை எடுக்கப்படுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.