பராசக்தி திரைப்படம் குறித்து இயக்குநர் சுதா கொங்காரா பேசியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் பராசக்தி. இப்படம் மொழித்திணிப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
மேலும், தமிழ் மொழியின் சிறப்புகளையும் அன்றைய அரசியலை மையப்படுத்தியும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயனும் அதர்வாவும் சகோதரர்களாக நடித்துள்ளதாக இயக்குநர் சுதா கொங்காரா தெரிவித்துள்ளார்.
மேலும், பராசக்தியில் வில்லனாக நடிக்க முதலில் ஹிந்தி நடிகரைத் தேர்வு செய்யும் திட்டத்தில் இருந்ததாகவும் ஆனால் தயாரிப்பாளர் நடிகர் ரவி மோகனிடம் கதாபாத்திரத்தை குறித்து சொன்னபோது அவரே நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சுதா கொங்காரா கூறியுள்ளார்.
முக்கியமாக, நான் என்ன கேட்டேனோ அதை மறுப்பின்றி ரவி செய்துகொடுத்தார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.