

சென்னை திரைப்பட விழா 2025 : 23-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
சிறந்த நடிகருக்கான விருதை டூரிஸ்ட் ஃபேமலி படத்தில் நடித்த நடிகர் சசிகுமாருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்தத் திரைப்பட விழாவில் திரையிட 3 பிஎச்கே, அலங்கு, பிடிமண், காதல் என்பது பொது உடைமை, மாமன், மாயக்கூத்து, மெட்ராஸ் மேட்னி, மருதம், ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி, வேம்பு ஆகிய 12 தமிழ்ப் படங்கள் தேர்வாகி இருந்தன.
இந்தத் திரைப்பட விழா கடந்த டிச.11 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்றது.
உலக சினிமாக்களையும் புதுமையான படங்களை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் திரைப்பட விழா நடத்தப்படுகிறது.
இந்திய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து தமிழக அரசு இந்த விழாவினை நடத்தி வருகிறது.
இந்தத் திரைப்பட விழாவில் விருது வென்றவர்கள்
சிறந்த நடிகர் - சசிகுமார் (டூரிஸ்ட் ஃபேமலி)
சிறந்த நடிகை - லிஜோமோல் ஜோஷ் (காதல் என்பது பொதுவுடைமை)
சிறந்த தமிழ்ப்படம் - பறந்து போ (ராம்)
இரண்டாவது சிறந்த படம் - டூரிஸ்ட் ஃபேமலி (அபிஷன் ஜீவிந்)
சிறப்பு ஜூரி விருது - காளி வெங்கட் (மெட்ராஸ் மேட்னி)
சிறப்பு ஜூரி விருது - ஷீலா ராஜ்குமார் (வேம்பு)
சிறந்த ஒளிப்பதிவாளர் - எஸ்.பாண்டி குமார் (அலங்கு)
சிறந்த எடிட்டர் - நாகூர் ராமச்சந்திரன் (மாயக்கூத்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.