சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் குறித்து...
Director Jason Sanjay with actor Sundeep Kishan.
நடிகர் சந்தீப் கிஷன் உடன் இயக்குநர் ஜேசன் சஞ்சய். படம்: லைகா புரடக்‌ஷன்ஸ்.
Updated on
1 min read

ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தின் பூஜை, படப்பிடிப்பு காட்சிகள் அடங்கிய விடியோவை வெளியிட்டு படக்குழு இதனை அறிவித்துள்ளது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார்.

லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க, தமன் இசையமைக்கிறார்.

ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்தப் படத்தின் பெயர் ’சிக்மா’ என அறிவிக்கப்பட்ட நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் டீசர் வரும் டிச.23ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The film crew has announced that the shooting of the film Sigma, directed by Jason Sanjay, has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com