

புகழ்பெற்ற மலையாள நடிகர் ஸ்ரீனிவாசனின் மறைவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற மலையாள இயக்குநரும் நடிகருமான ஸ்ரீனிவாசன் (வயது 69) இன்று (டிச. 20) உடல் நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு முக்கிய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ஸ்ரீனிவாசனின் மறைவுக்கு பிரபல தமிழ் நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:
“என் அருமை நண்பர் ஸ்ரீனிவாசனின் மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது. திரைப்படக் கல்லூரியில் அவர் எனக்கு வகுப்புத் தோழனாக இருந்தார். அவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் மிகவும் நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
48 ஆண்டுகளில் 225-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ஸ்ரீனிவாசனுக்கு, பிரபல மலையாள நடிகர் மற்றும் இயக்குநருமான வினீத் ஸ்ரீனிவாசன் என்ற மூத்த மகனும், மலையாள நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான தயான் ஸ்ரீனிவாசன் என்ற இளைய மகனும் உள்ளனர்.
இதையும் படிக்க: பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.