நடிகர் கமல் ஹாசன் இயக்குநர் கே. பாலச்சந்தர் குறித்து பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் கே. பாலச்சந்தரின் நினைவு நாளான இன்று நடிகர் கமல் ஹாசன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” எனும் பல முறை கேட்ட தேய்வழக்கு, என் வாழ்வில் பாலச்சந்தர் அவர்களுக்கும் அவரது தோழர் நாகேஷ் அவர்களுக்கும் பொருந்தும். இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல.
“இந்த இயக்குநர் உனக்கு எனக்குப்பின் நீ படிக்க நல்ல இடம்” என்று எனக்கு ஒரு சிகரத்தை அடையாளம் காட்டிய அவ்வை சண்முகம் ஆசானையும் இன்று நன்றியோடு நினைத்து வணங்குகிறேன்.” எனக் கூறியுள்ளார்.
இறுதியாக, நடிகர் கமல் ஹாசனுடன் உத்தம வில்லன் திரைப்படத்தில் கே. பாலச்சந்தர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.