ஜன நாயகன், பராசக்தி... அதிக திரைகள் யாருக்கு?

ஜன நாயகன், பராசக்தி திரைப்படங்கள் குறித்து...
actor vijay and sivakarthikeyan
நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய்
Updated on
1 min read

ஜன நாயகன், பராசக்தி திரைப்படங்களுக்கான முதல் நாள் திரைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பண்டிகை வெளியீடுகள் என்றாலே உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் திரைக்கு வருவது கொண்டாட்டமானதுதான். 2026 பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் ஜன நாயகனும் நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தியும் திரைக்கு வருகின்றன.

இருவருக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கும் என்பதால் மற்ற திரைப்படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை.

முழுநேர அரசியலுக்கு வந்த பின் விஜய் நடிப்பில் வெளியாகும் இறுதியான திரைப்படம் ஜன நாயகன் என்பதாலும் இனி விஜய்யை திரையில் எப்போது பார்ப்போம் எனத் தெரியாததாலும் அவரின் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றனர்.

அதேபோல், இயக்குநர் சுதா கொங்காரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் ஜன நாயகன் வெளியான ஒருநாள் கழித்து ஜன. 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

actor vijay and sivakarthikeyan
திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

இந்த நிலையில், தமிழகத்தில் 1100-க்கும் அதிகமாகவுள்ள திரைகளில் 45 சதவீதம் திரைகள் பராசக்தி திரைப்படத்திற்கும் மீதமுள்ள திரைகளில் ஜன நாயகன் படமும் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும், பழைய திரைப்படங்கள், பிறமொழி படங்களும் சில திரைகளில் இருக்கும் என்பதால் ஜன நாயகன், பராசக்தி திரைப்படங்கள் சரி சமமாக திரைக்கு வரலாம் எனத் தெரிகிறது. இதனால், முதல்நாள் வசூலில் பெரிய சாதனைகள் இருக்காது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Summary

theatre screens for jana nayakan and parasakthi movies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com