

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்தப் புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் நாளை மாலை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது பெயரிலேயே உருவாக்கியுள்ள சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களை உருவாக்கி வருகிறார்.
கனா முதல் ஹவுஸ் மேட்ஸ் வரை இதுவரை 8 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
தற்போது புதிய படத்தினை பேஸன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இதன் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது. அதில் ஒரு பாட்டி கடவுள்கள் அடங்கிய புகைப்படங்களுக்கு முன்பு வந்து நிற்பது போல காட்சிகள் உள்ளன.
இதன் முதல்பார்வை போஸ்டர் மற்றும் டீசர் நாளை (டிச.24) மாலை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.