

நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் புராண காவிய கதைக்காக மீண்டும் இணைய இருக்கிறார்கள்.
இது நடிகர் அல்லு அர்ஜூனுக்காகவே உருவாக்கப்பட்ட கதை என்பதால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அல்லு அர்ஜுன் மற்றும் திரிவிக்ரம் ஆகியோர் கூட்டணி இதற்கு முன்பு பல ஹிட் படங்களை கொடுத்துள்ளது. அவர்களின் முந்தைய படமான 'அலா வைகுந்தபுரமுலூ' தென்னிந்தியா முழுவதும் கவனிப்பட்டதுடன் நல்ல வசூலையும் பெற்றது.
தற்போது, இந்த கூட்டணி 4-வது முறையாக புதிய திரைப்படத்தில் இணைகிறது. திரைத்துறையில் வெளியான தகவல்களின்படி, இந்தப் படம் இந்திய சினிமா இதுவரை பார்த்திராத அளவு பிரம்மாண்டமான புராண கதையாக ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.
பிப்ரவரி 2027-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.