

நடிகை சாரா அர்ஜுன் நாயகியாக அறிமுகமான தன் முதல் திரைப்படத்திலேயே பாகிஸ்தானிலும் பிரபலமடைந்துள்ளார்.
தெய்வத் திருமகள், சைவம் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பரவலான கவனத்தைப் பெற்றவர் நடிகை சாரா அர்ஜுன். இயக்குநர் மணிரத்னம் இயக்கிய, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இளவயது ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்திலும் நடித்து கவனம் ஈர்த்தார்.
குழந்தை நட்சத்திரமாகவே பார்க்கப்பட்ட சாரா, அண்மையில் வெளியாகி வசூல் வேட்டையை நிகழ்த்திவரும் துரந்தர் திரைப்படம் கதாநாயகியாகவும் அறிமுகமாகியுள்ளார்.
இப்படம் வட இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருவதால் விரைவில் ரூ. 1000 கோடிகளைக் கடக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உளவாளியாக இருக்கும் கேங்ஸ்டரின் கதையாகவும் மும்பை துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சில உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டும் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இதில், நாயகன் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்திருந்தார்.
இந்த நிலையில், இப்படம் பாகிஸ்தானைத் தவறாக சித்திரிப்பதாக பாகிஸ்தானிலும் சில இஸ்லாமிய நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தன் அறிமுக திரைப்படத்திலேயே பாகிஸ்தான் வரை பிரபலமடைந்துள்ளார் சாரா.
இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ளதால் இன்னும் பெரிய நட்சத்திரமாக சாரா அர்ஜுன் வளர்வதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.