ஜப்பானில் வெளியாகும் அனிமல் திரைப்படம்!

நடிகர் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் குறித்து...
Animal movie poster.
அனிமல் பட போஸ்டர். படம்: எக்ஸ் / டீ -சீரிஸ்.
Updated on
1 min read

நடிகர் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் ஜப்பானில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவான இந்தப் படம் பெண்ணியவாதிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தினாலும் ரூ.917 கோடி வசூலித்து அசத்தியது.

தந்தை மகன் கதையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் வரும் பிப். 13ஆம் தேதி ஜப்பானில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்துக்காக இசையமைப்பாளர் ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர், ஒலி வடிவமைப்பு சச்சின் சுதாகரன், ஹரிஹரன் முரளிதரன் ஆகியோருக்கு தேசிய விருது கிடைத்தது.

இந்தப் படத்தில் நடிகர்கள் பாபி தியோல், அனில் கபூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

நடிகை ரஷ்மிகா மந்தனாவின் நடிப்பும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தில் துணை நடிகையாக நடித்த த்ரிப்தி டிம்ரி ஸ்பிரிட் படத்தில் நாயகியாக நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Summary

The film 'Animal', starring actor Ranbir Kapoor, will be released in Japan, the film crew has announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com