பிக் பாஸ் 9: கமருதீனுக்கு விஜே பார்வதி அம்மா கூறிய அறிவுரை!

கமருதீனுக்கு விஜே பார்வதி அம்மா கூறிய அறிவுரை குறித்து...
கமருதீனுக்கு விஜே பார்வதி அம்மா கூறிய அறிவுரை.
கமருதீனுக்கு விஜே பார்வதி அம்மா கூறிய அறிவுரை.
Updated on
1 min read

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சிக்கு வந்த விஜே பார்வதியின் அம்மா, கமருதீனுக்கு அறிவுரை கூறிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி சிறப்பான முறையில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் போட்டியாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி ஊக்கப்படுத்தி செல்கின்றனர்.

முன்னதாக சான்ட்ரா, கானா வினோத், அமித் பார்கவ், திவ்யா கணேஷ், அரோரா உள்ளட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்தனர்.

இந்த நிலையில், இன்று(டிச. 25) பார்வதியின் அம்மா பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் கமருதீனுக்கு, ”நீங்கள் உங்கள் தொழிலில் முன்னேற வேண்டும். யாரையும் கைவிடாத குணங்களில் நாயகனாக இருக்க வேண்டும். இந்த வீட்டில் எது நல்லதென்று உரசி பார்க்க வேண்டும்” என்று அறிவுரை கூறினார்.

இதனைத் தொடர்ந்து கமருதீனின் அக்கா பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் கமருதீனிடம், “அக்காவ மறந்துட்டியே தம்பி, வாழ்க்கை பற்றி முடிவெடுக்க வேண்டிய இடம் இது கிடையாது, பார்வதி என்னை அக்கானு சொன்னாங்க, சரிமா தங்கச்சினு நான் சொன்ன” என சிரித்துக்கொண்டே தெரிவித்தார். இது குறித்த முன்னோட்ட விடியோவில் இன்று வெளியானது.

இதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது குறித்த முழு விவரம் இன்று(டிச. 25) இரவு ஒளிபரப்பாகும் எபிசோடில் தெரியவரும்.

விஜே பார்வதி மற்றும் கமருதீன் இடையே நட்பைத் தாண்டிய உறவு இருப்பதாக இருவரும் கூறிய நிலையில், இரு வீட்டார் குடும்பத்தினரும் வந்துள்ளனர். பார்வதியின் அம்மா 24 மணி நேரம் பிக் பாஸ் வீட்டில் தங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The advice given to Kamarudeen by VJ Parvathi Amma.

கமருதீனுக்கு விஜே பார்வதி அம்மா கூறிய அறிவுரை.
பிக் பாஸ் வீட்டில் பூரியால் வெடித்த சண்டை! என்ன நடந்தது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com