அமோக வரவேற்பு... 5 மொழிகளில் வெளியாகும் துரந்தர் 2 திரைப்படம்!

நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் 2 படத்தின் அப்டேட் குறித்து...
Dhurandhar movie scenes.
துரந்தர் படக் காட்சிகள். படங்கள்: எக்ஸ் / ஜியோ ஸ்டூடியோஸ்.
Updated on
1 min read

நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் 2 திரைப்படம் பான் இந்திய மொழிகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

ஆதித்யா தார் இயக்கத்தில் துரந்தர் திரைப்படம் கடந்த டிச.5-இல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்தில் மாதவன், அக்‌ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன், சஞ்சய் தத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

பாகிஸ்தான் நாட்டில் உளவாளியாகச் சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கு உதவும் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்தப் படம் இந்து முஸ்லீம் பிரச்னையை உருவாக்கும் விதமாக இருக்குமென சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

பி62 ஸ்டூடியோஸ் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை வெளியிட்டது.

இந்தப் படத்தை இயக்குநர் ஆதித்யா தார் ஜோதி தேஷ்பாண்டே , லோகேஷ் தாருடன் இணைந்து தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் இந்தியாவில் மட்டுமே ரூ.619.30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது.

இதன் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு மார்ச்.19ஆம் தேதி வெளியாகுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் வரவேற்பைப் பொறுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் துரந்தர் 2 வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The much anticipated sequel to filmmaker Aditya Dhar's "Dhurandhar 2" is slated to release in theatres on March 19, coinciding with the festival of Eid, the makers announced on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com