

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பகிர்ந்த புதிய ரீல்ஸ் விடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்துவது ஏன் என்ற அந்த ரீல்ஸில் அவரது நடிப்புத் திறமையும் கவனம் ஈர்த்து வருகிறது.
தமிழில் இவன் தந்திரன் படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அறிமுகமானார். விக்ரம் வேதா படத்தில் மிகவும் கவனிக்கப்பட்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
கடைசியாக ஆர்யன் படத்தில் நடித்திருந்தார். விரைவில் இவரது ப்ரோ கோட் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் வைரலான ஒரு ரீல்ஸுக்கு தனது பாணியில் நடித்து விடியோ வெளியிட்டுள்ளார். அந்த விடியோ பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
இந்த ரீல்ஸ் விடியோவினை முதன்முதலில் உருவாக்கியவர் நுன்னா ரமேஷ். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவருக்கு இன்ஸ்டாகிராமில் 9.6 லட்சம் ஃபாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள்.
இவர் 13 வாரங்களுக்கு முன்பாக, எனக்கு ஏன் இன்ஸ்டாகிராம் பிடிக்கிறது என ஆக்ரோஷமாகப் பேசும் விடியோவை சினிமா பாணியில் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்டிருந்தார்.
இந்த விடியோவிற்கு இன்ஸ்டாகிராம் நிர்வாகமே கமெண்ட் செய்திருந்தது.
9 மில்லியன் (90 லட்சம்) பார்வைகளைப் பெற்றுள்ள இந்த ரீல்ஸைத்தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மறு உருவாக்கம் செய்துள்ளார். இவரது ரீல்ஸ் விடியோவும் 1 மில்லியனை (10 லட்சம்) தாண்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.