

கூலி படத்தின் மீதான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் லோகேஷ் கனகராஜ் பேசுகையில் "கூலி படம் தொடர்பாக மக்களுக்கு நன்றி சொல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. கூலி படத்தின் மீது ஆயிரக்கணக்கான விமர்சனங்கள் வந்தன.
படத்தின் மீதான விமர்சனங்களையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, அடுத்த படங்களில் அவற்றைத் தவிர்க்க முயற்சி செய்வேன்.
இருப்பினும், எல்லா விமர்சனங்களையும் மீறி, ரஜினிக்காகவும் கூலி படத்தை மக்கள் பார்த்தனர்.
மக்களின் ஆதரவால்தான் கூலி திரைப்படம் ரூ. 500 கோடி வசூலித்தது. இதற்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி. அதற்கு உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்கள், மீம் கிரியேட்டர்ஸ், விமர்சகர்கள், யூடியூபர்கள் அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.