

த்ரிஷ்யம் 3 படத்திலிருந்து விலகியதாக அக்ஷய் கன்னா மீது தயாரிப்பாளர் குமார் மங்கத் பதக் வழக்கு தொடர்ந்துள்ளார்.
த்ரிஷ்யம் 2 படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய் கன்னா மொட்டைத் தலையுடன் நடித்திருந்தார். படத்தின் 3-வது பாகத்திலும் அவர் அதே தோற்றத்துடன் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார்.
ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்னர் த்ரிஷ்யம் படத்திலிருந்து விலகியதாக அக்ஷய் கன்னா மீது த்ரிஷ்யம் தயாரிப்பாளர் குமார் மங்கத் பதக் குற்றம் சாட்டியுள்ளார்.
த்ரிஷ்யம் 3 படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாள்கள் மட்டுமே இருந்த நிலையில், படத்தின் கதாபாத்திரத்தில் தலையில் முடியுடன் இருக்கும் தோற்றத்துடன் நடிக்கவிருப்பதாக கோரிக்கை விடுத்தார்.
ஆனால், முந்தைய பாகத்தில் இருந்த தோற்றத்துடனேயே நடிக்க வேண்டும் என்று அக்ஷய் கன்னாவிடம் வலியுறுத்தியதாக தயாரிப்பாளர் குமார் கூறினார்.
இருப்பினும், அக்ஷய் கன்னா விக் (Wig) அணிந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரது நண்பர்கள் கூறியதால், அக்ஷய் கன்னா மீண்டும் கோரினார்.
இந்த நிலையில், அக்ஷய் கன்னாவின் கோரிக்கையை மறுத்ததால், த்ரிஷ்யம் 3 படப்பிடிப்புக்கு 10 நாள்கள் மட்டுமே இருந்தபோது, படத்திலிருந்து அக்ஷய் கன்னா விலகுவதாகக் கூறினார்.
இது ஒரு தொழில்முறையற்ற நடத்தை என்று அக்ஷய் கன்னா மீது தயாரிப்பாளர் குமார் குற்றம் சாட்டினார். மேலும், அக்ஷய் கன்னாவால் இழப்புகள் ஏற்பட்டதால், அவர் மீது வழக்கு தொடரவிருப்பதாகவும் குமார் மங்கத் பதக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.