பிக் பாஸ் 9 : நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்ல தகுதியற்றவர் யார்?

பிக் பாஸ் 9 இறுதிப்போட்டிக்கு நேரடியாகச் செல்லத் தகுதியற்றவர்கள் யார்? என்ற விஜய் சேதுபதியின் கேள்விக்கு கிடைத்த பதில் குறித்து..
திவ்யா, கமருதீன், சான்ட்ரா, விஜே பார்வதி
திவ்யா, கமருதீன், சான்ட்ரா, விஜே பார்வதிபடம் - எக்ஸ்
Updated on
2 min read

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு நேரடியாகச் செல்லத் தகுதியற்றவர்கள் யார்? என்ற விஜய் சேதுபதியின் கேள்விக்கு போட்டியாளர்கள் அளித்த பதில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 12 வாரங்களைக் கடந்துள்ளது. வார இறுதிநாளான நேற்று நடிகர் அமித் பார்கவ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று (டிச., 28) மற்றொரு போட்டியாளர் வெளியேறவுள்ளார். கனி திரு வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் 3 வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெறவுள்ளது. இதனையொட்டி நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்ல ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதற்காக போட்டிகள் வைக்கப்படும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் நபர் நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்வார்.

எஞ்சிய மற்ற போட்டியாளர்களில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறுவர். இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு நேரடியாகச் செல்ல தகுதியற்ற நபராக நீங்கள் கருதுவது யார்? என போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார்.

எஞ்சியுள்ள 10 போட்டியாளர்கள்
எஞ்சியுள்ள 10 போட்டியாளர்கள்படம் - எக்ஸ்

இதற்கு பதில் அளித்த விக்கல்ஸ் விக்ரம், சுபிக்‌ஷா ஆகியோர் திவ்யா கணேசன் நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்லத் தகுதியற்றவர் எனக் கூறினர். போட்டியில் தொடர் பங்களிப்பை என்றுமே அவர் கொடுத்ததில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

சபரிநாதன், அரோரா ஆகியோர் சன்ட்ரா தகுதியற்றவர் எனக் கூறினர். பிக் பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்கள் உழைத்த அளவுக்கு சான்ட்ரா உழைக்கவில்லை என்றும், தான் உழைத்துப் பெற்ற நாமினேஷன் ஃபிரீ வாய்ப்பையும் கணவர் ப்ரஜினுக்குதான் கொடுத்தார். இதனால், பிக் பாஸ் வீட்டில் இருப்பதன் மதிப்பு அவருக்குத் தெரியவில்லை என்பது உறுதியாவதால், இறுதிப்போட்டிக்கு நேரடியாகச் செல்ல சான்ட்ரா தகுதியற்றவர் எனக் கூறினர்.

இதேபோன்று சுபிக்‌ஷா, திவ்யா கணேசன் ஆகியோர் கமருதீனை தகுதியற்றவராகக் குறிப்பிட்டனர். பிக் பாஸ் வீட்டில் சண்டையிடுவதைத் தவிர எந்தவொரு இடத்திலும் அவரின் பங்களிப்பு இல்லை என்றும், வீட்டின் தலைவராக இருந்தபோதுகூட பொறுப்பாக செயல்படவில்லை எனவும் குற்றம் சாட்டினர். இது தொடர்பான முன்னோட்ட விடியோவும் வெளியாகியுள்ளது.

தற்போது பிக் பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் 5 பேர் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவார்கள்.

திவ்யா, கமருதீன், சான்ட்ரா, விஜே பார்வதி
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிடுவேன் : கமருதீன் - விஜே பார்வதி மோதல்
Summary

bigg boss 9 tamil direct finalist competition

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com