ஜன நாயகன் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது.
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 அன்று பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. கேவிஎன் புரடக்ஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (டிச. 27) மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்வில், விஜய் பேசிய பேச்சு ரசிகர்களிடம் உருக்கத்தை ஏற்படுத்தியுடன் விழா நிகழ்வுகள் பலருக்கும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பெங்களூருவில் இப்படத்தின் முதல்நாள் அதிகாலைக் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைன் வாயிலாக துவங்கியுள்ளன.
ஆரம்பமான சில நிமிடங்களிலேயே பெரும்பாலான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. தமிழகத்தில் ஜன. 3 ஆம் தேதி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.