

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து கனி திரு வெளியேற்றப்பட்ட நாளை மறக்கமாட்டேன் என விஜே பார்வதி தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் உள்ள எல்லோருக்கும் தன் மீது வன்மம் உள்ளதாகவும், அனைவரையும் தனக்கு எதிராக முன்னிறுத்திய குழுவின் தலைவராக கனி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 13 வது வாரத்தை எட்டியுள்ளது. வார இறுதி நாளான சனிக்கிழமை அமித் பார்கவ் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் கனி திரு வெளியேற்றப்பட்டார்.
கடந்த சில வாரங்களாக ஆட்டத்தில் முன்னேற்றத்தைக் கொண்டிருந்த கனி திரு வெளியேறியது அதிர்ச்சி அளிப்பதாக சக போட்டியாளர்களான விக்கல்ஸ் விக்ரம், சுபிக்ஷா உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.
பிக் பாஸ் வீட்டில் அன்பு நீடித்திருந்ததற்கும், மகிழ்ச்சி, நேர்மறை எண்ணங்கள் இருந்ததற்கும் கனி திரு முக்கிய காரணம் எனவும் சக போட்டியாளர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், கனி திரு வெளியேறிய இந்த நாளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன் என சான்ட்ராவிடம் விஜே பார்வதி கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் உள்ள 9 போட்டியாளர்களில் சான்ட்ராவை தவிர அனைவரும் தனக்கு எதிரான வன்மத்துடன் இருந்ததாகவும், ஒரே அணியாகச் செயல்பட்டதாகவும் விமர்சித்தார்.
கனி திரு தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதைப்போன்று சான்ட்ராவுடன் விஜே பார்வதி பேசிக்கொண்டிருந்தார். சான்ட்ராவும் பார்வதியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளை முன்வைத்தார்.
இதோடுமட்டுமின்றி கனி வெளியேறும்போது, விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன் ஆகியோர் கண்கலங்கி அழுததையும் விஜே பார்வதி குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் பலர் விஜே பார்வதியை விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.