கவனம் ஈர்க்கும் பராசக்தி படத்தின் மேக்கிங் விடியோ!

பராசக்தி படத்தின் மேக்கிங் விடியோ வெளியானது குறித்து...
ராசக்தி படத்தின் மேக்கிங் விடியோ.
ராசக்தி படத்தின் மேக்கிங் விடியோ.
Updated on
1 min read

பராசக்தி படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சிவகாா்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜன.10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பராசக்தி படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தி திணிப்பை எதிர்த்து கடந்த 1965-ஆம் ஆண்டு நடந்த மொழிப்போரை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தணிக்கைக்கு அனுப்பியபோது சென்சார் அதிகாரிகள் நிறைய இடங்களில் வசனங்களையும் அரசியல் கருத்துகளையும் நீக்கச்சொன்னதால் பராசக்தி தயாரிப்பு நிறுவனம் மறுதணிக்கைக் குழுவிற்கு இப்படத்தை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பராசக்தி படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Summary

The making-of video of the film Parasakthi is attracting the attention of fans.

ராசக்தி படத்தின் மேக்கிங் விடியோ.
சென்னை விமான நிலையத்தில் கீழே விழுந்த விஜய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com