சென்னை விமான நிலையத்தில் கீழே விழுந்த விஜய்!

சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஜய் கீழே விழுந்ததால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் கீழே விழுந்த விஜய்.
சென்னை விமான நிலையத்தில் கீழே விழுந்த விஜய்.
Updated on
1 min read

சென்னை விமான நிலையத்தில், நடிகர் விஜய் கார் ஏற முயன்றபோது, கீழே விழுந்ததால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இயக்குநர் எச். வினோத் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் திடலில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்தியா சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் 80 ஆயிரம் ரசிகர்களுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனிடையே, மலேசியா நிகழ்ச்சியை முடித்துகொண்டு நடிகர் விஜய் நேற்று(டிச. 28) இரவு சென்னை திரும்பினார்.

மலேசியாவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த தவெக தலைவரும் நடிகருமான விஜய்யை வரவேற்க ரசிகர்கள், தொண்டர்கள் பலர் திரண்டிருந்தனர்.

விஜய் தனது காரில் ஏற முயன்றார். அப்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் விஜய் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னர், சமாளித்து கொண்டு அவரே மீண்டும் எழுந்தார்.

உடனடியாக விஜய்யை மீட்ட பாதுகாவலர்கள், அவரை காரில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Summary

At the Chennai airport, a brief commotion ensued when actor Vijay stumbled and fell while trying to get into his car.

சென்னை விமான நிலையத்தில் கீழே விழுந்த விஜய்.
தேர்தல் கூட்டணி: விஜய் சூசகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com