

மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக அவர்களுடன் நிற்பேன் என்று நடிகரும் தவெக தலைவருமான விஜய் பேசியுள்ளார்.
மலேசியாவில் சனிக்கிழமை நடைபெற்ற ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசுகையில் "மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் உள்ளனர். நண்பர் அஜித் நடித்த பில்லா படமும் இங்கேதான் எடுக்கப்பட்டது.
சினிமா துறையில் சிறிய மணல் வீடு கட்ட வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. ஆனால், நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு அரண்மனையையே கொடுத்திருக்கிறீர்கள்.
33 வருடங்களாக தொடர் ஆதரவு என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால், அதனைத் தான் எனது ரசிகர்கள் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். அதற்கு வெறும் நன்றி மட்டும் சொல்லாமல், நன்றிக் கடன் செலுத்தும்விதமாக அவர்களுக்காக நிற்கின்றேன்.
வாழ்க்கையில் முன்னேற நண்பர்களைவிட வலுவான எதிரிகள்தான் வேண்டும். வலுவானவர்களை எதிர்த்தால்தான், வெற்றி பெறும் அளவுக்கு நமக்கு வலு கிடைக்கும்.
விஜய் தனியாக வருவாரா? அணியா வருவாரா? என்ற பேச்சும் சமீபமாக இருக்கிறது. நான்தான் 33 வருடங்களாக மிகப்பெரிய அணியான மக்களுடன் இருக்கிறேன்.
கைத்தட்டலுக்காக இதனைப் பேசவில்லை, மக்களுக்காகப் பேசுகிறேன். மக்களுக்காகப் பேசுவதோடு அல்லாமல், அவர்களுக்காக செய்யவும் வேண்டும்; செய்வதைத்தான் சொல்லவும் வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்களும் கலந்து கொண்டு பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.