

நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படுமெனக் கூறப்பட்டுவந்த நிலையில் சன் பிக்சர்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் ஜன நாயகன் ஜன.9ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால் ஜன நாயகன் தனது கடைசி திரைப்படமாக இருக்குமெனக் கூறியுள்ளார்.
இந்தப் படத்துக்குப் போட்டியாக ஏற்கெனவே சிவகார்த்திகேயன் - ஜெயம் ரவி நடித்துள்ள பராசக்தி ஜன.10ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் அஜித்தின் மங்கத்தா திரைப்படம் ஜனவரியில் மறுவெளியீடாகுமெனக் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில், சன் பிக்சர்ஸ் புதிய விடியோவை வெளியிட்டுள்ளது. அதில், எப்போது என்பது போல கண்கள் எமோஜியைக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் வெளியாகுமா அல்லது தொலைக்காட்சியில் வெளியாகுமா என்பது தெரியவில்லை. விஜய் படத்துக்கு எதிராக அஜித் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.