
வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் குறுகிய காலத்தில் நிறைவடைந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் 228 எபிசோடுகளுடன் நேற்று(பிப். 15) நிறைவடைந்தது.
கூட்டுக் குடும்பத்தில் உறவுகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து இத்தொடரை பாரதி கண்ணம்மா, ராஜா ராணி தொடர்களை இயக்கிய பிரவீன் பென்னட் இயக்கினார்.
இந்தத் தொடரில் ஈரமான ரோஜாவே தொடர் பிரபலம் திரவியம் ராஜ்குமார், நடிகை ஸ்ரீதா சிவதாஸ், அவினாஷ், ஆர்த்தி சுபாஷ் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்தனர்.
இதையும் படிக்க: எந்த விபத்தும் ஏற்படவில்லை; நலமுடன் இருக்கிறேன்: யோகி பாபு
வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் நேற்று ஒளிபரப்பப்பட்டு 228 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.
இத்தொடர் ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுகூட ஆகாத நிலையில், நிறைவடையந்தது இத்தொடரை விரும்பி பார்க்கும் ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நன்றாக ஒளிபரப்பான தொடரை முடித்துவிட்டதாகவும், இதுபோன்ற குடும்பத்தொடர்கள் ஒளிபரப்பாவது மிகவும் அரிது எனவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.