மீண்டும் 'பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன்' படத்தில் ஜானி டெஃப்?

நடிகர் ஜானி டெஃப் மீண்டும் பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தில் நடிக்கிறாராம்...
மீண்டும் 'பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன்' படத்தில் ஜானி டெஃப்?
Published on
Updated on
1 min read

நடிகர் ஜானி டெஃப் மீண்டும் பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன்' (Pirates of the Caribbean) படங்களில் 'ஜேக் ஸ்பாரோ' கதாபாத்திரத்தில்  நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் ஜானி டெப். தலையில் ஓரு தொப்பியுடன் மதுபோதையில் தள்ளாடியபடியே இருக்கும் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலகோடி ரசிகர்கள் உள்ளனர்.

இதுவரை 5 பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், ஆறாவது பாகத்திற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாகவும் இப்பாகத்திலும் நடிகர் ஜானி டெஃப் ஜாக் ஸ்பாரோவாக நடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜானி டெஃப் மற்றும் அவரின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட்டுக்கு இடையே நடைபெற்ற வழக்கில் ஜானி குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் திரைவாழ்க்கையில் இன்னும் பெரிய படங்கள் எதுவும் ஜானிக்கு அமையவில்லை.

இச்சூழலில் மீண்டும் பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன் திரைப்படம் ஜானிக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com