இயக்குநர் ஜீத்து ஜோசப் படப்பிடிப்பு விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’ , ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய திரைப்படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் 3 ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இப்பாகம் உறுதியானதாக அண்மையில் மோகன்லால் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க: பராசக்தி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!
இந்த நிலையில், இயக்குநர் ஜீத்து ஜோசப் புதிதாகப் படப்படிப்பு செய்வதுபோன்ற விடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், எந்தப் படத்திற்கானது என்பதைக் குறிப்பிடவில்லை. இதனால், இது த்ரிஷ்யம் - 3 படப்பிடிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், நடிகர் மோகன்லால் இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் ஹ்ருதயப்பூர்வம் என்கிற படத்திலும் மம்மூட்டியுடன் ஒரு படத்திலும் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.