பிக் பாஸ் 8: இறுதிப் போட்டிக்கு ரயான் நேரடித் தேர்வு!

அதிக புள்ளிகளைப் பெற்ற ரயான், நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
ரயான்
ரயான்படம் | எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று அதிக புள்ளிகளைப் பெற்ற ரயான், நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்றுவரும் இறுதிப்போட்டிக்கு நேரடியாகச் செல்லும் (டிக்கெட் டூ ஃபினாலே) போட்டிகளில் 10 பேர் போட்டியிட்டு வருகின்றனர்.

இவர்களில் அதிகப் புள்ளிகளைப் பெற்று இந்த சீசனில் நேரடியாக இறுதிச் சுற்றுக்குச் சென்ற முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. 88வது நாளான இன்று டிக்கெட் டூ ஃபினாலே எனப்படும் நேரடியாக இறுதிப் போட்டியாளராகத் தகுதி பெறுவதற்காக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

பிக் பாஸ் வீட்டில் தொலைபேசி ஒலிக்கும். இதனை எடுக்கும் போட்டியாளருக்கு விதிமுறைகள் கொடுக்கப்பட்டு டாஸ்க் கொடுக்கப்படும். ஆனால் இப்போட்டியில் அவர் விளையாடுவதற்கு பதிலாக தான் நம்பிக்கை வைத்து தேர்வு செய்யும் நபர் அப்போட்டியில் விளையாடி வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றால் தொலைபேசியில் பேசியவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். அதில் விரும்பும் புள்ளிகளை தனக்காக விளையாடியவருக்கு கொடுக்கலாம்.

சக போட்டியாளர்கள்
சக போட்டியாளர்கள்படம் | எக்ஸ்

இப்போட்டியில் பிக் பாஸ் வீட்டில் உள்ள 10 போட்டியாளர்களும் பங்கேற்று வருகின்றனர். இதில் வெற்றி பெறும் சிலர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு நேரடியாகச் செல்வார்கள். மற்றவர்கள் மக்கள் அளிக்கும் வாக்குகள் மூலம் மட்டுமே நீடித்து இறுதிப் போட்டிக்கு வர முடியும்.

இந்த வாரம் முழுக்க நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பின் மூலம் அதிகப் புள்ளிகளைப் பெற்ற ரயான் முதல் நபராக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

இதையும் படிக்க | பிக் பாஸிலிருந்து வெளியேறிய பிறகு ஜெஃப்ரியை சந்தித்த தர்ஷிகா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com