பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜெஃப்ரியை நடிகை தர்ஷிகா நேரில் சந்தித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. இறுதிக்கட்டத்தை நோக்கி பிக் பாஸ் வீடு சென்றுகொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
குறைந்த வாக்குகளைப் பெற்றதாக கடந்த வாரம் ஜெஃப்ரி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதற்கு முன்பே நடிகை தர்ஷிகா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் அப்போட்டிக்கு பிறகு நண்பர்களாகத் தொடர்வது சற்று கடினமானது. பலரும் தங்கள் துறையில் வேலைபளுவில் இருப்பதால், சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

ஜெஃப்ரி உடன் தர்ஷிகா - படம் | இன்ஸ்டாகிராம்
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ஜெஃப்ரியை நடிகை தர்ஷிகா நேரில் சந்தித்துள்ளார். அவர்கள் இருவரும் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சித் தொகுப்பாளராகும் மாயா கிருஷ்ணன்!

பிக் பாஸ் - 10 ஒளிபரப்பு எப்போது?

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் செளரவ் கங்குலி!

பிக் பாஸ் சிபி நடித்த ஈகோ ராமன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



