
இயக்குநர் ஷங்கரின் பேச்சு வருத்தம் தருவதாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற ஜன. 10 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் அரசியல் பின்னணியைக் கதையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
தமன் இசையமைத்த பாடல்கள் கவனம் பெற்றுள்ளதாலும் படத்தின் டீசர் கொடுத்த ஆவலிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: பொங்கலுக்கு வெளியாகும் 8 திரைப்படங்கள்
படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அப்படி, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ஷங்கர், “கேம் சேஞ்சர் திரைப்படத்தை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போலத்தான் எடுத்துள்ளேன். இன்றைய இளைஞர்களுக்கு இன்ஸ்டா கொடுக்கும் சுவாரஸ்யத்துக்கு இணையாக கேம் சேஞ்சர் உருவாக்கப்பட்டுள்ளது” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் இயக்குநர் ஷங்கரின் பேச்சு வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அனுராக், “ஷங்கர் போன்ற ஜாம்பவான் இயக்குநர்கள் இப்படி பேசுவது வருத்தத்தைத் தருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்போல படத்தை எடுத்திருக்கிறேன் என்றால் ரசிகர்களின் தேவைக்காக இயக்குநர் தன்னை மாற்றிக்கொண்டதாகிவிடும். நல்ல உணவை பரிமாறுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, அற்புதமாக சமைத்துக் கொடுப்பது. இரண்டு, பரிமாறுபவராக இருந்து கேட்கும் உணவை பரிமாறுவது. இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.