பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சுனிதா, அர்ணவ், தர்ஷா!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
அர்ணவ், சுனிதா, தர்ஷா குப்தா
அர்ணவ், சுனிதா, தர்ஷா குப்தாபடம் | எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

முதல் வாரமே வெளியேற்றப்பட்ட ரவீந்திரன், சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமார், வர்ஷினி உள்ளிட்ட பழைய போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்றுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து மஞ்சரி, ராணவ் ஆகியோர் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக வெளியேற்றப்பட்டனர். இதனால் 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் எஞ்சியிருந்தனர். இதில் ரயான் நேரடியாக பிக் பாஸ் இறுதிப் போட்டியாளராகத் தகுதி பெற்றார்.

முத்துக்குமரன், தீபக், வி.ஜே. விஷால், அருண் பிரசாத், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் எஞ்சியுள்ளனர்.

இந்நிலையில் போட்டியை மேலும் சுவாரசியமாக்கும் வகையில் பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வீட்டில் உள்ள போட்டியாளர்களுடன் போட்டியிட்டு அதில் வெற்றி பெறுபவர்கள் இறுதிப் போட்டிக்கு அனுப்பப்படுவர். இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் பழைய போட்டியாளர்களான சுனிதா, அர்ணவ், தர்ஷா, ரவீந்திரன், சிவக்குமார், வர்ஷினி ஆகியோர் மீண்டும் நுழைந்துள்ளனர்.

இவர்களில் இருவர் போட்டிகளில் பெறும் வெற்றியின் அடிப்படையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள இருவருக்கு மாற்றாக அமையவுள்ளனர். இதனால் போட்டியின் மீதான சுவாரசியம் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | பிக் பாஸ் வெற்றியாளர் பெண்தான்; முத்துக்குமரன் அல்ல: ஜெஃப்ரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.